என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இளம்பெண் கைது"
கேரள மாநிலம் பாலக்காடு கல்லேக்காடு 2-ம் மைலில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர்கள் முகமது ரியாஸ்- ரிஸ்வான் தம்பதி. சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு திருச்சூர் சென்றனர்.
அங்கு வேலை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த 13 பவுன் நகை திருட்டுபோனது தெரியவந்தது. கதவு, ஜன்னல் எதுவும் உடைக்கப்படாத நிலையில் திருட்டு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பாலக்காடு வடக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் அலவி, சப்- இன்ஸ்பெக்டர் ரஞ்சித் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அதே குடியிருப்பை சேர்ந்த பஷீரின் மனைவி பசீலா (வயது 29) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பசீலாவிடம் நடத்திய விசாரணையில் திருட்டு நடந்த வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை திறந்த உரிமையாளர் சாவியை கதவிலேயே விட்டுச்சென்றார். அப்போது பசீலா அந்த சாவியை நைசாக எடுத்துக்கொண்டார். வீட்டு உரிமையாளர் சாவி தொலைந்து விட்டது என்று நினைத்து மாற்றுசாவியை ஏற்பாடு செய்து உபயோகப்படுத்தினார்.
இந்நிலையில் தம்பதி வெளியே சென்றபோது எடுத்து வைத்திருந்த சாவி மூலம் பசீலா கதவை திறந்து 13 பவுன் நகையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் பசீலாவை கைது செய்தனர்.
விசாரணையில் பசீலா, மாமனாரை விஷம் வைத்து கொல்ல முயன்ற வழக்கு, கணவரின் பாட்டியை கொன்ற வழக்கு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது. அடுக்குமாடி குடியிருப்பை அடிக்கடி மாற்றி கைவரிசை காட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொள்ளாச்சி அருகே உள்ள கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் பெநசீர் (வயது 27). இவர் கிணாச்சேரியில் உள்ள ஒரு கிளை நிதி நிறுவனத்தில் கடந்த பல ஆண்டுகளாக மேனேஜராக உள்ளார்.
மார்ச் மாதம் இந்த அலுவலகத்தில் தணிக்கை நடைபெற்றது. இதில் பலருக்கு நகை அடமான கடன் கொடுக்கப்பட்டுள்ளதாக ரசீதுகள் இருந்தன. ரசீதுகளின்படி நகை வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை பார்த்தபோது அங்கு நகைகள் இல்லை.
இதேபோன்று பலருக்கு லட்சக்கணக்கில் கடன் கொடுத்துள்ளதாக ஆவணங்கள் இருந்தன. ஆவணங்களில் உள்ளபடி அவர்களது முகவரியை தேடியபோது அப்படி எவரும் இல்லை.
வாங்காத நகைக்கும், இல்லாத நபர்களுக்கும் ரூ.35 லட்சம் கடன் கொடுத்தது போல் இளம்பெண் மோசடி செய்துள்ளது தணிக்கையில் தெரியவந்தது. தணிக்கை நடந்தபோது மேனேஜர் பெநாசீர் தலைமறைவானார்.
மோசடி குறித்து அறிந்த நிதி நிறுவன அதிபர்கள் பாலக்காடு டி.எஸ்.பி. சகிக்குமாரிடம் புகார் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பெநாசீர் அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி போலீசார் அங்கு சென்றனர். வீட்டில் வைத்து இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவை காரமடையை சேர்ந்த சிவக்குமார் என்பவரது மனைவி அனிதாதேவி (வயது 33).
இவர் கோவை உக்கடத்தில் இருந்து வடகோவை சென்ற பஸ்சில் ஒரு பெண் பயணியிடம் ரூ.10 ஆயிரம் பிக்பாக்கெட் அடித்த போது தனிப்படை போலீசார் கையும், களவுமாக மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
இவர் கடந்த 5 ஆண்டுகளாக பஸ்களில் கூட்டநெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் நகை, பணம், செல்போன்களை பிக்பாக்கெட் அடித்தது தெரிய வந்தது.
பயணிகளுக்கு தன் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதால், அடிக்கடி அழகு நிலையத்துக்கு சென்று முடிஅழகை மாற்றி, சிகை அலங்காரம் செய்துள்ளார். திருடிய பணத்தில் மளிகை கடை நடத்தி வந்துள்ளார்.
சுய உதவி குழு தலைவியாகவும் செயல்பட்ட இவர் வங்கியில் இருந்து லட்சக்கணக்கில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. மிகப்பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்.
சுய உதவி குழு மூலம் வாங்கிய கடனை அடைப்பதற்காக பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இவர் இதுவரை எத்தனை பேரிடம் எவ்வளவு பணம் திருடினார்? திருட்டு பணத்தை வேறு எங்கெல்லாம் முதலீடு செய்துள்ளார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு உட்பட்ட சில பகுதிகளில் கோர்ட்டில் ஜாமீன் பெற போலியாக அரசு சான்றிதழ் தயாரித்து விற்பதாக புகார் எழுந்தது.
இதனை தொடர்ந்து வருவாய் துறையினர் போலி சான்றிதழ் தயாரிக்கும் கும்பலை கூண்டோடு பிடிக்க திட்டமிட்டனர். சப்-கலெக்டர் ஷ்வன் குமார் அறிவுரைப்படி தாசில்தார் ஜெயக்குமார், வருவாய் ஆய்வாளர் பரமேஸ்வரன் ஆகியோர் மோசடி கும்பல் பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது திருப்பூர் அவினாசி சாலை எஸ்.ஏ.பி. தியேட்டர் பின்புறம் உள்ள பாரதி நகரில் மகேஸ்வரி என்பவருக்கு சொந்தமான பியூட்டி பார்லரில் போலி சான்றிதழ் கிடைப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்படி வருவாய் துறையினர் ஏற்பாடு செய்த மணி என்பவர் பியூட்டி பார்லரில் இருந்த மாசாண வடிவு என்ற பெண்ணிடம் சான்றிதழ் கேட்டு பணம் கொடுத்தார்.
அதன் படி சப்-கலெக்டர் அலுவலகம் வந்த மாசாண வடிவு மணியிடம் அவர் கேட்டபடி சான்றிதழ் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் மாசாண வடிவை கைது செய்தனர்.
மாசாண வடிவு அளித்த தகவலின் பேரில் பியூட்டி பார்லர் நடத்தி வரும் மகேஸ்வரியும் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து பல்வேறு அரசு அலுவலகம் மற்றும் அதிகாரிகள் பெயரில் வைத்திருந்த கோபுர சீல், போலி சீல் கட்டை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மகேஸ்வரி நடத்திய பியூட்டி பார்லரில் பேரூராட்சி செயல் அலுவலர், நில அளவை ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி துறை ஆகியோரது பெயரில் போலி முத்திரைகள் கொண்ட சீல் கட்டைகள் இருந்தது.
மேலும் ஜாமீன் மனு, பட்டா, வாரிசு சான்று, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவைகள் கத்தை, கத்தையாக இருந்தது. அதனையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
இந்த மோசடியில் வக்கீல், புரோக்கர், மற்றும் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
வக்கீல் தன்னிடம் ஜாமீன் கேட்டு வருபவர்களிடம் மகேஸ்வரி நடத்தும் பியூட்டி பார்லருக்கு சென்றால் சான்றிதழ் வாங்கி விடலாம் என பரிந்துரை செய்து அனுப்பி உள்ளார்.
அதன் படி ஜாமீனுக்கு முயற்சி செய்பவர்கள் மகேஸ்வரியிடம் வந்து சான்றிதழ் பெற்று சென்று உள்ளனர். ஒரு சான்றிதழ் வழங்க ரூ. 8 ஆயிரம் பெற்றுள்ளனர்.
வக்கீல், புரோக்கர் உள்பட 3 பேரை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். போலி சான்றிதழ் மூலம் எத்தனை பேர் ஜாமீனில் வந்துள்ளனர் என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
போலீசாரிடம் மகேஸ்வரி கூறும் போது, திருப்பூரில் தான் இந்த போலி சான்றிதழ், அரசு முத்திரை தயார் செய்ததாக கூறி உள்ளார். அவருக்கு இந்த முத்திரையை தயார் செய்து கொடுத்தது யார்? என்பது தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து தாசில்தார் ஜெயக்குமார் கூறியதாவது-
கோர்ட்டு ஜாமீன் சான்றிதழ் தேவை என மாசாண வடிவிடம் தொடர்பு கொண்ட போது ரூ. 8 ஆயிரம் கேட்டனர். 2,500 பணம் கொடுத்தோம். அதன் படி மாசாண வடிவு போலி சான்றிதழுடன் வந்த போது கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூரில் கோர்ட்டில் ஜாமீன் பெற தாசில்தார், வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்து, அரசு முத்திரையை போலியாக பயன்படுத்துவதாக வடக்கு தாசில்தார் ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அரசு முத்திரையை போலியாக தயார் செய்தவர்களை பிடிக்க தாசில்தார் நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரியும் மணி என்பவரை பயன்படுத்தினார்.
அதன் படி மணி ஜாமீன் தொடர்பாக ஒரு பெண்ணை அணுகினார். அப்போது அவர் ஜாமீன் தொடர்பாக அரசு அதிகாரிகள் கையெழுத்து, அரசு முத்திரை ஆகியவற்றை நான் பார்த்து கொள்கிறேன். அதற்கு ரூ. 8 ஆயிரம் செலவாகும் என அப்பெண் கூறி உள்ளார்.
தாசில்தார் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மணி இதற்கு ஒப்புக்கொண்டார். முதல் கட்டமாக ரூ. 2 ஆயிரத்து 500 -ஐ அப்பெண்ணிடம் கொடுத்தார்.
இன்று மணியை தொடர்பு கொண்ட அப்பெண் ஜாமீன் மனு தயாராகி விட்டது. கோர்ட்டு அருகே வந்து வாங்கி கொள்ளுங்கள் என கூறினார். உடனே மணியும் புறப்பட்டு சென்றார்.
அப்போது அப்பெண் மனுவை கொடுத்தார். அவரை மணி மடக்கி பிடித்தார். பின்னர் அவரை தாசில்தார் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார்.
அவரிடம் சப்- கலெக்டர் ஷ்வரன் குமார், தாசில்தார் ஜெயக்குமார், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சை ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அப்பெண்ணின் பெயர் மாசான வடிவு (30). திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.
அவரிடம் இருந்து அரசு அதிகாரிகள் கையெழுத்திட்டது போன்ற போலி சான்று, போலி அரசு முத்திரை உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். அவரிடம் விசாரித்த போது கடந்த ஒரு வருடமாக போலி சான்று தயாரித்து வருவதாக தெரிவித்தார்.
தனக்கு உதவியாக மேலும் 5 பேர் இருந்ததாகவும் கூறினார்.
மாசான வடிவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம் மாவட்டம் காரை கிராமம் குட்டை கார தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (35). இவர்களுக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். ராஜாராம் நேற்று முன்தினம் இரவு வெம்பாக்கம் அருகே பில்லாந்தாங்கல் மெயின்ரோட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாராமின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
கொலையான ராஜாராமின் செல்போன் மூலம் போலீசார் துப்பு துலக்கினர். அதில் கடைசியாக பேசியது காஞ்சிபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வி (28) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தனர்.
அப்போது ராஜாராமின் நண்பர் குமார் (30) என்பவருக்கும் தமிழ்செல்விக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. குமார், தமிழ்செல்வி மூலம் ராஜாராமை வரவழைத்து வெட்டி கொலை செய்ததை கண்டு பிடித்தனர்.
இதையடுத்து குமார், தமிழ்செல்வி இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
கொலையுண்ட ராஜாராம், குமார் இருவரும் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.
குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது கள்ளக்காதலி ராஜராராமுடன் தொடர்பில் இருந்தார்.
இதனால் குமாருடன் பேசுவதை தவிர்த்தார். ஆத்திரமடைந்த குமார் ராஜாராமை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
நேற்று முன்தினம் இரவு குமார் அவரது மற்றொரு கள்ளக்காதலியான தமிழ்செல்வி மூலம் போனில் பேசி ராஜாராமை கீழ்நெல்லி மெயின் ரோட்டில் உள்ள மைதான பகுதிக்கு வரவழைத்தார்.
அங்கு சென்ற ராஜாராமை தயாராக இருந்த குமார் கத்தியால் வெட்டி சாய்த்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குமார், தமிழ்செல்வி இருவரையும் கைது செய்தனர். #tamilnews
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு கடை வீதியில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் 6 பேர் காரில் துணி எடுக்க வந்தனர். துணிகளை தேர்வு செய்வது போல நடித்து கடைகளில் இருந்த 5 சேலை, 16 ஜாக்கெட் பிட் ஆகியவற்றை திருடிக் கொண்டு கடையை விட்டு வெளியேறினர். இதன் மதிப்பு ரூ.8 ஆயிரம் ஆகும். அவர்கள் சென்ற பிறகு ஊழியர்கள் இருப்பை சரிபார்த்த போது துணி குறைந்திருந்தது தெரிய வந்தது.
அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். 5 பேர் தப்பி ஓடி விட்டனர். காரை ஓட்ட முயன்ற ஒரு பெண்ணை மட்டும் பிடித்தனர். அப்போது அவர் ஆண் வேடமிட்டு காரை ஓட்டி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த ராணி என தெரிய வந்தது.
அவர்கள் வந்த காரை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய ராணியின் கணவர் முருகேஷ், செல்லசாமி, வண்ணமதி, கொடி உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.
திருத்தணி அருகே உள்ள கூளூர் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரிடம் மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக அரக்கோணம் கும்மினிப்பேட்டையை சேர்ந்த மூர்த்தி மற்றும் பாண்டிச்சேரி கொட்டுப்பாளையத்தை சேர்ந்த குகன் அவரது மனைவி திரிபுரசுந்தரி ஆகியோர் தெரிவித்தனர்.
இதனை நம்பி ஜெயக்குமாரும் அவரது உறவினர்கள் 4 பேரும் மின்வாரிய வேலைக்காக ரூ.13½ லட்சம் அவர்களிடம் கொடுத்தனர். ஆனால் மூர்த்தி தரப்பினர் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. பணத்தையும் கொடுக்க மறுத்து இழுத்தடித்தனர்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயக்குமார் இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சி.பி.சக்கரவர்த்தியிடம் புகார் செய்தார். அவரது உத்தரவுப்படி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன், சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் வேலை வாங்கிக் கொடுப்பதாக மூர்த்தி, குகன் அவரது மனைவி திரிபுர சுந்தரி ஆகியோர் ரூ.13½ லட்சம் மோசடி செய்தது தெரிந்தது.
இதையடுத்து திரிபுரசுந்தரியை போலீசார் கைது செய்தனர். குகன், மூர்த்தியை தேடி வருகிறார்கள்.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் மங்கப்புஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் பீர்முகம்மது. இவரது மனைவி முகைதீன் பாத்திமா (43) செம்பனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் சம்பவத்தன்று மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து தனியார் பஸ்சில் கல்லூரிக்கு சென்றார். அவர் பயணம் செய்த பஸ் ஒத்தக்கடை பஸ் நிறுத்தத்தில் நின்றபோது 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஏறினார்.
முகைதீன் பாத்திமா அருகே அமர்ந்திருந்த அந்த பெண் மேலூர் பஸ் நிலையத்தில் இறங்கினார். அப்போது முகைதீன் பாத்திமா பையில் 5½ பவுன் நகை இருந்த மணிபர்சு மாயமாகி விட்டது. இதனை அந்த பெண் அபேஸ் செய்து விட்டு தப்பியதை அறிந்த முகைதீன் பாத்திமா கூச்சலிட்டார். உடனே மற்ற பயணிகள் அந்த பெண்ணை மடக்க பிடித்து மேலூர் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் முகைதீன் பாத்திமா வின் மணிபர்சை திருடியது தெரியவந்தது. அதில் இருந்த 5½ பவுன் நகையும் மீட்கப்பட்டது. மணிபர்சை திருடி தப்ப முயன்ற அந்த பெண் திருச்சி சமயபுரத்தை சேர்ந்த கார்த்திக் மனைவி மீனாட்சி (28) என்பது தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் வேறு சம்பவங்களில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்